×

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டிய உடன் அணை நிரம்பியதாக அறிவிக்கபட்டு, அணைக்கு வரும் தண்ணீர்முழுவதும் உபரி நீராக ஆற்றில் திறக்கபடும். தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணை நீர் மட்டம் இன்று அதிகாலை 5 மணிஅளவில் 69-அடியை எட்டியது.

இதன் காரணமாக தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் மதகு பகுதியில் வைக்கபட்டுள்ள அபாய சங்கு 3 முறை ஒலிக்கபட்டது. நீர் மட்டம் 69 அடியை எட்டிய நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்வது தற்போது குறைந்துள்ளதால் அணைகான நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவும், செல்ஃபி எடுக்கவும் வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அணை பயன்பாட்டிற்கு வந்த 1958-ம் ஆண்டு முதல் தற்போது வரை 34-வது முறையாக முழுகொள்ளவை எட்டுயுள்ளது.

The post வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..! appeared first on Dinakaran.

Tags : Viagai Dam ,Theni ,Vaigai Dam ,Teni District ,Andi Patti ,Dinakaran ,
× RELATED இன்று முதல் வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு